காசாவில் போர் நிறுத்தம்: அழுத்தம் கொடுக்கும் நாடுகள்
காசாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் தினசரி நான்கு மணிநேரம் சண்டையை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
மனிதாபிமான உதவிகள்
ஹமாஸிடம் உள்ள 10-15 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதையடுத்து அதற்கு பதிலாக காசாவில் 3 நாள்களுக்கு மட்டும் போரை நிறுத்திவைக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காசாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா அமைப்புகள் இணைந்து காசாவிற்கு எவ்வாறு எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்துவருகின்றன.
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam