இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அஹுங்கல்ல - வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை ரோல்ஸிற்குள் பிளாஸ்டிக் முட்டை இருந்ததென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தான் சாப்பிட்ட முட்டை ரோல்ஸில் ஒன்றில் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக மீன் வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முட்டை ரோல்ஸ்
முட்டை ரோல்ஸ் சாப்பிடும் போது, முட்டையை எவ்வளவு கடித்தாலும் உடைத்தாலும், முட்டை உடையவில்லை என்பதனால் அதனை கையில் எடுத்து பார்க்கும் போது அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட முட்டை என தெரியவந்ததென மீன் வியாபாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் முட்டை பகுதியை எரித்ததாகவும் ஆனால் அது எரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சுகாதார பரிசோதகர்கள்
முறைப்பாட்டிற்கமைய, அஹுங்கல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
முட்டையின் பாகத்தின் முடிவைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
