மன்னாரில் பீடி இலை பொதிகளுடன் 3 பேர் கைது
மன்னார் (Mannar) வங்காலை கடற்கரை பகுதியில் பீடி இலை பொதிகளுடன் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று திங்கட்கிழமை (08.07.2024) மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரின் தகவல்
வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப்படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், வங்காலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும் மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam