கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பயணிகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே செல்ல முயற்சித்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை தங்கள் பொதிகளில் மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் மூவர் கைது
கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் ஓட்டுநர்களாக பணி புரியும் நபர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கள் பைகளில் 04 பொதிகளாக தயாரிக்கப்பட்ட 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri