கனடாவில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு - இரு தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது (Photo)
கனடா - Kawartha Lakes நகரில் $6 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விசாரணையின் பின்னர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 அன்று மூன்று குடியிருப்புகள் மற்றும் இரண்டு வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சந்தேகநபர்கள் எதிர்வரும் 19ம் திகதி ஓஷாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதான தாமஸ் குரேலி, 26 வயதான கபிலன் அனுர மற்றும் 27 வயதான தனோஜா தர்மகுலசேகரம் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் குரேலி மற்றும் கபிலன் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் நோக்கத்திற்காக பொருளை வைத்திருந்ததாகவும் அனுர மீது குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.