மிரிஸ்வெவ காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற மூவர் கைது: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வெவ காட்டுப் பகுதியில், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யுத்த காலத்திற்கு முன்னர் தங்களது மூதாதையர்கள் மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததாகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்குத் தாக்கல்
இந்தக் காணிகளை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களை அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் வருடா வருடம் அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த போதிலும், திணைக்கள அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதாக அப்பாவி மக்கள் வேதனை வெளியிடுகின்றனர்.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri