திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் இலங்கைக்கு இரண்டாம் இடம்
அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இலங்கையின் இசாடி அமந்தா இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ட்சேகோ கேலே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். அதேநேரம் தாய்லாந்தின் ப்ளாய் பான்பெர்ம் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமண்டா மிஸஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றிருந்தார்.
குற்றச்சாட்டு
இதற்கிடையில், அமந்தா மற்றும் தேசிய அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Watch: The moment Sri Lanka’s Ishadi Amanda made history as the country's first runner-up at the 40th Mrs. World pageant in Las Vegas, USA.
— Asian Mirror (@AsianMirror) January 31, 2025
South Africa’s Tshego Gaelae claimed the coveted title, while Thailand’s Ploy Panperm secured the 2nd runner-up position. pic.twitter.com/DbJnQ6X57r
இதன் காரணமாக கடவுச்சீட்டுக்களை பெறுவதிலும், தனது ஆடைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து ஆதரவு
இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருந்தால், இலங்கை பட்டத்தை வென்றிருக்க முடியும் என்று இசாடி அமந்தா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது முயற்சிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் உதவியதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |