கிளிநொச்சியில் இருவர் கைது
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கணை பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.02.2024) இடம்பெற்றுள்ளது.
இரவு நேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச்சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது 7 எருமை மாடுகளை ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏழு கால்நடைகளும் மாடுகளை ஏற்றி வந்த கப்ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் (21) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri