திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Kumar Feb 11, 2025 01:40 PM GMT
Report

திருகோணமலை, கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வு பூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று (11) குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

படுகொலை

அத்துடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களிடம் மனு ஒன்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு | 29Th Anniversary Of Kumarapuram Massacre

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொடூர சம்பவம் 1996.02.11ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 96 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவான் மு.கோ.செல்வராசா முன்னிலையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

குற்றச்சாட்டு

இதன்போது 7 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்போது போதிய சாட்சியங்கள் இருப்பதன் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 154ஆவது பிரிவின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்காக குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டது.

திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு | 29Th Anniversary Of Kumarapuram Massacre

இந்தநிலையில், பாதுகாப்பு நிமிர்த்தம் குறித்த வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

நல்லூரன் தெற்கு வாசல் வளைவு திறந்து வைப்பு

நல்லூரன் தெற்கு வாசல் வளைவு திறந்து வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US