நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 26ம் ஆண்டு நினைவுதினம்
இலங்கை பாதுகாப்புப் படையினரால் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின்போது பலியானவர்களின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
நவாலி தேவாலயத் தாக்குதல் படுகொலை என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 150 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியிலிருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது.
மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் பலத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், சுமார் 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
