இந்தியாவில் கோவிட் 19 இரண்டாம் அலையில் 269 மருத்துவர்கள் பலி - ஒரே நாளில் 50 மருத்துவர்கள் இறப்பு
இந்தியாவில் கோவிட் 19 வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலைமையில், 269 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ பேரவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காணப்படும் நிலைமையில் சாதாரணமாக தினமும் 20 முதல் 25 மருத்துவர்கள் கோவிட் 19 காரணமாக உயிரிழந்து வருவதாகவும் பேரவை கூறியுள்ளது. கோவிட் 19 தொற்றின் முதலாவது அலை காரணமாக இந்தியாவில் 756 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
இந்த மருத்துவர்களில் பலர் இளம் வயது மருத்துவர்கள் என இந்திய மருத்துவ பேரவை கூறியுள்ளது. பொது சுகாதாரம் கடும் நெருக்கடியான நிலைமையில் இருக்கும் பொழுது, குறைந்த வளமாக கருதப்படும் நாட்டின் மருத்துவர்களை இழப்பதை தாங்கி கொள்ள முடியாது என்பதுடன் அதனை ஈடுகட்ட முடியாது எனவும் இந்திய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை இந்தியாவில் ஆயிரத்து 25 மருத்துவர்களை கொரோனா பலியெடுத்துள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக் கிழமையில் மாத்திரம் 50 மருத்துவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ பேரவை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
