மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் புதிய தவணைக்காக நாடளாவிய ரீதியில் இன்று திறக்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 25 பாடசாலை திறக்கப்படவில்லை என தெரியவருகிறது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினுள் அடங்கும் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்குமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஹர்த்தால் காரணமாக அதிபர், ஆசிரியர்கள் அப்பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்த போதிலும், மாணவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam