வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா
சிரியாவில் கடந்த ஒன்பது நாட்களாக அமெரிக்க படைகள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல்களில் IS அமைப்பைச் சேர்ந்த 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அல்லது பிடிபட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சிரியாவின் பால்மைரா பகுதியில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உட்பட மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டுள்ளன.
தீவிரப்படுத்தப்படும் தாக்குதல்கள்
சிரியாவின் மத்திய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையானது, IS அமைப்பின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு IS அமைப்பின் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.