'ஐஸ்' போதைப்பொருள் பாவிப்போரில் ஏற்பட்ட அதிகரிப்பு
நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் பாவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய ஆபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 60,000க்கும் மேற்பட்டோர் 'ஐஸ்' போதைப்பொருள் பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என NDDCB இயக்குநர் தமரா தர்ஷன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளாக கைது செய்யப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களின் படி 'ஐஸ்' போதைப்பொருள் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருவதைக் காட்டுவதோடு, கஞ்சா பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஒப்பிடும்போது 'ஐஸ்' பயன்பாட்டின் அதிகரிப்பு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் பாவிப்பவர்களில் அண்ணளவாக 99 சதவீதம் பேர் ஒரேவகை போதை பொருளை பயன்படுத்துபவர்கள்.
அத்தோடு 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.