ஆயிரக்கணக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு
மேலும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த 3 தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டெம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
