வவுனியா - ஓமந்தையில் 235 ஏக்கர் காணி விடுவிப்பு
வவுனியா(Vavuniya) - ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் பகுதிக்கு விஜயம் செய்து காணிகளை பார்வையிட்ட பின் இன்று (10.06.2024) கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களுக்கான காணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பனிக்கர் புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் வாழ்வாதார பயிர் செய்கைக்கு நீண்ட காலமாக காணியின்றி அவதிப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற வகையில் வனவளத் திணைக்களத்துடன் பல தடவை கலந்துரையாடி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது அந்த மக்களுக்கான காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - ஓமந்தை,பனிக்கர் புளியங்குளம் குளத்திற்கான காணி உட்பட மக்களின் வாழ்வாதாரப் பயிற் செய்கைக்காக 235 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு அதனை விடுவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த பகுதியில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு ஏக்கர் காணி வாழ்வாதார நடவடிக்கைக்காக வழங்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
