கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை (09.06.2026) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகரைச்சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் என்ற 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகள்
உயிரிழந்த இளைஞனின் சடலம் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவமானது முறையற்ற மின் இணைப்பு காரணமாகவே குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri