நுவரெலியா - ஹக்கலையில் தொடர்ந்து தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்
நுவரெலியா ஹக்கலையில் கடந்த வருடம் டித்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தற்காலிக கூடாரங்களில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான கற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா ஹக்கலை பகுதியில் அமைக்கப்படுள்ள தற்காலிக கூடாரங்கள் காற்றில் பறக்கும் நிலையில் உள்ளதாகவும் வீசும் காற்றுக்கு தாங்கும் சக்தி கூடாரங்களுக்கு இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்,
கூடாரங்களில் தங்கியிருப்பது
மண்சரிவு அபாயத்தால் தங்களது வீடுகளை இழந்த இந்த குடும்பங்கள் ஆரம்பத்தில் பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த நிலையில், பின்னர் அரசாங்கம் ஏற்பாடு செய்த தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
எனினும் மழைக்காலம் மற்றும் பலத்த காற்று வீசும் நாட்களில் அந்த கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமானதாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரவு நேரத்தில் தங்கியிருக்கும் கூடாரத்தைச் சுற்றும் விஷப் பாம்புகள், விஷப் பூச்சிகளால் எங்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது எனவும் இது தொடர்பில் கடந்த மாதங்களில் நாங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் காரணமாக வெலிமடைபிரதேசபையின் அரச அதிகாரிகள் கடுமையாக திட்டியதாகவும் மக்கள் யாரிடமும் கூற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கும் அல்லது பாதுகாப்பான இடமொன்றில் மீளக் குடியமர்த்தவோ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
மேலும், குறித்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri