தென்கொரிய விமான விபத்து : உயிர் பிழைத்த இருவர்
புதிய இணைப்பு
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், இருவரைத் தவிர அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எஞ்சியுள்ள சடலங்களை மீட்க மீட்பு குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.
இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒரு பயணி மற்றும் ஒரு விமான ஊழியர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.
இரண்டாம் இணைப்பு
தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது.
விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது
விபத்தின்போது விமானத்தில் 175 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |