22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு தேவை - அரசாங்கம்
22ம் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதன ரத்து செய்ய நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்வரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக அதனை ரத்து செய்ய முயல்வது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
22ஆவது திருத்தத்தை ரத்து செய்யப்போவதாகக் கூறும் தரப்பினருக்கு ஒருபோதும் ஆட்சி அதிகாரம் கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தத்தை ரத்து செய்வது என்பது அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் குறைப்பதற்கும், நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமே சமமாகும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாமலேயே எதிர்க்கட்சியினர் 22ஆவது திருத்தத்தை ரத்து செய்வோம் என கோருவதற்கான ஏதுவாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri