நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள்.. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து எழுப்பப்படும் கேள்வி
நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் என்ன தவறு உள்ளது எனப் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
80 வயதைக் கடந்தவர்கள்..
சட்டங்களை இயற்றும் இடமாக நாடாளுமன்றமும், அச்சட்டங்களை நடைமுறைபடுத்தும் இடமாக நீதித்துறையும் திகழ்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு சட்டங்களை உருவாக்குபவர்கள் பலர் இருப்பதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறிருக்கையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விவகாரத்தை எதற்காக ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்றும் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!