இலங்கை யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை!
நடப்பு ஆண்டின் கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க குறித்த விடயத்தை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
யானைகள் உயிரிழப்பு
அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன.
கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் கடைசியாக இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே காட்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பில் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் உதவியுடன் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
வனப்பகுதிகளுக்கு வெளியே காட்டு யானைகளின் இறப்பு ஒரு கவலைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




