யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் 220 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு துறை மற்றும் சிறப்பு அதிரடி படை இணைந்து இன்று அதிகாலையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சாவுடன் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு
இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோகிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையும், சிறப்பு அதிரடி படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 220 கிலோகிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடி படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam