யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(14) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
