பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி : 22 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று(26.04.2026) உத்தரவிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு
கைப்பற்றப்பட்ட 110 கிலோகிராம் எடையுள்ள 'குஷ்' மற்றும் 'ஹசீஸ்' ரக போதைப்பொருள்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியை வழங்கியவர்கள் யார்? இந்தப் பாரிய கடத்தல் பின்னணியில் இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு எது? இந்தச் சதித்திட்டத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆகிய கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இளம் பிக்குகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri