நாட்டில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
நாட்டில் இன்று 725 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 555,204 ஆக இருந்த நிலையில், தற்போது 555,929 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15,468 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 442 பேர் இன்று குணமடைந்துள்ளனர் எனவும்,இதுவரையில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 526,353 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது.