தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக 22 குற்றச்சாட்டுக்கள்: பதிலளிக்கவும் வாய்ப்பு
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது பதவியின் தவறான நடத்தை மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் 22 குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முன்னிலையில், நாளைய தினம் அவர் பிரசன்னமாகும் போது, இந்த 22 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை அவருக்கு கையளிக்கப்படவுள்ளது.
நாளை முதல் விசாரணை
தென்னகோன் நாளை பிற்பகல் 2 மணிக்கு குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு, அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த குழு நாடாளுமன்றத்தின் குழு அறை 8 இல் கூட உள்ளது.
தென்னகோனுக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், அவர் பதிலளிப்பதற்காக நேரம் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே இந்தக் குழு கடந்த சில வாரங்களாக அதன் ஆரம்ப விசாரணைக்காக நாடாளுமன்றத்தில் கூடி வருகிறது, இதனடிப்படையிலேயே தென்னகோனை அழைப்பதன் மூலம் நாளை முதல் விசாரணை ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
