இத்தாலியில் சுற்றுலா பேருந்து விபத்து: 21 பேர் பலி
இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளதோடு 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்
இருப்பினும் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பேருந்து, வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு, தொடருந்து பாதைகளுக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் தற்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
