கொழும்பில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு - தாக்குதலுக்கு திட்டம் என சந்தேகம்
கொழும்பு கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக 205 தோட்டாக்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
புறகோட்டை, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட பொருளாதார மையங்கள் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற தோட்டாக்கள் கண்டுபிடிப்பது பாதுகாப்பு பிரச்சினை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ரி56 ரக துப்பாக்கியின் 176 தோட்டாக்களும், 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் 29 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தோட்டாக்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்த இடத்திற்கு கொண்டு வந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கட்டடத்தின் நான்காவது மாடியில் 12 அறைகள் உள்ள நிலையில் ஒரு கழிப்பறை மாத்திரமே உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதி முழுவதும் கடந்த சில மாதங்களாகவே துப்பறவு செய்யப்படவில்லை. கொவிட் தொற்று காரணமாக இந்த கட்டடம் மூடப்பட்டிருந்ததமையினால் அதனை துப்பறவு செய்யவில்லை என குறிப்பிடப்படுகின்றது. நேற்று துப்பறவு செய்ய சென்ற போதே ஊழியர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டாக்கள் அனைத்தும் பயன்படுத்த கூடிய வகையில் புதிதாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தாக்குதல் ஒன்றுக்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார் கட்டடத்தின் ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கட்டடத்தில் உள்ள சீசீடீடி கமரா கட்டமைப்பை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan