பொதுநலவாய போட்டிகளை நடத்துவதில் அவுஸ்திரேலியாவுக்கு புதிய சிக்கல்
அவுஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகள் நடைபெறுவது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.
அதீத செலவீனங்கள் காரணமாக போட்டிகளை நடத்தும் தமது திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அந்நாட்டின் விக்டோரியா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில காலமாக பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கான நாட்டை தெரிவு செய்வதில் பொதுநலவாய போட்டிகளுக்கான சம்மேளனம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு விக்டோரியா மாநில அரசாங்கம் தாமாக முன்வந்திருந்தது.
விக்ரோரியா மாநில தீர்மானம்
எனினும் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான செலவீனம் தற்போது மும்மடங்காகியுள்ளதால், அதனை மாநில அரசினால் தாங்கி கொள்ள முடியாது என மாநில முதல்வர் கூறியுள்ளார்.
விக்டோரியா மாநில அரசின் இந்த தீர்மானம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பொதுநலவாய போட்டிகளுக்கான சம்ளேனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான தீர்வொன்றை எட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அந்த சம்ளேளனம் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு வகையான விளையாட்டுக்களை உள்ளடங்கிய பொதுநலவாய போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
இந்தப் போட்டிகள், இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் மாத்திரமே மீளெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்வாறான ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
மேலும், பொதுநலவாய போட்டிகளுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் வீர வீராங்கனைகள் மத்தியிலும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் காலணித்துவ நாடுகளாக இருந்த பெரும்பாலான நாடுகளே பொதுநலவாய போட்டிகளில் பங்கெடுப்பதுடன், பொதுநலவாய அமைப்பில் தற்போது 56 உறுப்பு நாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
