பதுளை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் அநுர தரப்பு
பதுளை மாவட்ட இறுதி முடிவு
பதுளை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 275,189 வாக்குகளை பதுளை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 6 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 102, 958 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 2 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
அத்துடன், புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 705,772 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 503,724
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 469,706
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 34,018 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதுளை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 309,538 வாக்குளையும் 6 ஆசனங்களையும் பதுளை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் பதுளை மாவட்டத்தில் 144,290 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 3 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் பதுளை மாவட்டத்தில் 19,308 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, பதுளை மாவட்டத்தில் 9,163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
ஊவா பரணகம தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 23,812 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 10,588 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2681 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியினர் 1478 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 35,279 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 10,685 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6,133 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வியலுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் வியலுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 18,089வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 8,204 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2,970 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன 997 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வெலிமட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் வெலிமட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 31,194 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 12,083 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2,849 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 1,500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பசறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 17,515 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 10,178 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6,361 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 2,051 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பதுளை - ஹாலி எல
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் ஹாலி எல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 26,628 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 10,487 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 1,716 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 939 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மகியங்கணை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் மகியங்கணை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 41,338 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 18,228 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3,289 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1626 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பதுளை - பதுளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 24,752 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 6,597 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4,227 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கூட்டணி 823 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்
பதுளை - தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 33,780 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 3,866 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2,227 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 675 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |