மொனராகலை மாவட்டம் - முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
மொனராகலை
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ஆர். எம். ஜயவர்த்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எச்.எம். தர்மசேனா - 20,171 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்
1. ஆர். எம். ஜயவர்த்தன - 105,107
2. அஜித் பிரியதர்ஷன் - 54,044
3. சதுரி கங்கானி - 42,930
4. ருவான் விஜேவீர - 40,505
5. சரத்குமார் - 39,657
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
1. எச்.எம். தர்மசேனா - 20,171
மொனராகலை மாவட்ட இறுதி முடிவு
மொனராகலை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 174,730 வாக்குகளை கேகாலை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 62, 041வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம்1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 11,624 வாக்குளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 399,166 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 284,847
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 271,856
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,991 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மொனராகலை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 208,193 வாக்குளையும் 5 ஆசனங்களையும் மொனராகலை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மொனராகலை மாவட்டத்தில் 54,147 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மொனராகலை மாவட்டத்தில் 11,429 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, மொனராகலை மாவட்டத்தில் 3,494 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
வெல்லவாய தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 74304 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 26497 பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 5084 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2216 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மொனராகலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான மொனராகலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 47,107 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 19,007வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3909 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1338 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மொனராகலை - பிபில தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான பிபில தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 33,633 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 13,213 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6,310 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1981 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 19,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் 3,297 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 650 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |