நுவரெலியா மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
நுவரெலியா
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்
01.மஞ்சுள சுரவீர - 78,832
02.மதுர செனவிரத்ன - 52,546
03.ஆர்.ஜி. விஜேரத்ன - 39,006
04.அனுஷிகா திலகரத்ன - 34,035
05.கிருஷ்ணன் காலைச்செல்வி - 33,346
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
1.பழனி திகாம்பரம் - 48,018
2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் - 42,273
ஐக்கிய தேசிய கட்சி - 01(unp)
1.ஜீவன் தொண்டமான் -46,478
நுவரெலியா மாவட்ட இறுதி முடிவு
நுவரெலியா மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 161,167 வாக்குகளை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 5 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 101,589 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 2ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 64,672 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 605,292 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 429,851
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 387,656
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 42,195 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 230,389 வாக்குளையும் 5 ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 132,008 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 3 ஆசனங்களை நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, நுவரெலியா மாவட்டத்தில் 12,974 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் நுவரெலியா மாவட்டத்தில் 5,043 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனை வெற்றிகொள்ளவில்லை.
மஸ்கெலியா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 71,741 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 55,916 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் 46,906 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 15135 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சுயேட்சைக் குழு 6இல் களமிறங்கியவர்கள் 4813 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொதுஜன பெரமுன 2116வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வலப்பனை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24,459 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 16,390 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் 5,012 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொதுஜன பெரமுன 1,648 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 26,807 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12,809 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் 2,323 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொதுஜன பெரமுன 797 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கொத்மலை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24,223 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 13,997 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் 8,771 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் குரல் 1,400 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொதுஜன பெரமுன 1259 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 13,937 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் 1,660 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 303 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.