ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றுமொருவர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியாக நான் முன்மொழியப்பட்டால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிடத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளருக்கு எனது ஆதரவு
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்வேன்.
நாட்டிற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதே எனது நம்பிக்கை, பொதுவான உடன்படிக்கைகள் மூலம் அரசியல் கூட்டணியை பேணுவதே நோக்கமாகும். அதன் கீழ் ஜனாதிபதித் தேர்தலும், வேட்பாளர் தெரிவும் இடம்பெறும்.
நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று கூட்டாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் சவாலை ஏற்கத் தயார்.
இம்முறையும் பொது நோக்கத்திற்காகவே எனது பங்களிப்பு. எந்தவொரு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளருக்கும் எனது ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |