2024ஆம் ஆண்டு தொடர்பில் ரணில் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் .
அதிகரித்துள்ள விலைவாசி
மேலும், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டணி அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதியுடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், பொருட்களின் விலை உயர்வாக இருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |