உலகம் முழுவதும் ஹமாஸை தேடித்தேடி வேட்டையாட தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் (Video)
கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பங்குபற்றிய ஹமாஸ் உறுப்பினர்களை படுகொலை செய்யும்படியான உத்தரவை இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமீன் நெதன்யாகு இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஓர் முன்னணி ஊடகமான த வோல்ஸ் கிறீன் ஜேர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு சுமார் 1200 இஸ்ரேலியர்களை படுகொலை செய்து, ஏராளமானவர்களை உயிருடன் பிடித்து சென்றிருந்த அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை ஹமாஸ் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடும் படியாக இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தாக்குதல் சம்பவத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றாலும், அவர்களையும் தேடி சென்று படுகெலை செய்யும்படியான உத்தரவுகள் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
காசாவில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் இந்த வேட்டை நடைபெறுமென்று கூறியுள்ள நிலையில், இது தொடர்பில் மேலும் ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
