கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2023: வெளியானது நடுவர் பட்டியல்
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆண்களுக்கான உலகக் கிண்ணப்போட்டி 2023 இற்கான நடுவர்கள் குறித்த விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன உட்பட ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவின் அனைத்து நடுவர்களும் பங்களிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரிகள், உரிய நேரத்தில் பெயரிடப்படுவார்கள் என்றும் இந்தப் பட்டியலில் 16 நடுவர்கள் மற்றும் நான்கு போட்டி நடுவர்கள் உள்ளதாகவும் ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
ஐ.சி.சி நடுவர்கள்
இந்நிலையில் 12 பேர் ஐ.சி.சி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு,
கிறிஸ்டோபர் கஃபேனி ((நியூசிலாந்து), குமார் தர்மசேன (இலங்கை), மரைஸ் எராஸ்மஸ் (தென்னாப்பிரிக்கா), மைக்கேல் கோஃப் (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), பால் ரீஃபெல் (அவுஸ்திரேலியா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ ( இங்கிலாந்து), ரோட்னி டக்கர் (அவுஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (மேற்கிந்திய தீவுகள்), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா).
மேலும் மீதமுள்ள நான்கு பேர் ஐ.சி.சி வளர்ந்து வரும் நடுவர் குழுவைச் சேர்ந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஸஷர்புத்தூலா இப்னே ஸாஹித் (பங்களாதேஸ்), போல் வில்சன் (அவுஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து) மற்றும் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து) ஆகியோர் இதில் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |