அதிவேக நெடுஞ்சாலைகளில் கடுமையாக்கப்படும் சட்டம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்போர் இருக்கை பட்டி அணிவது குறித்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள அனைத்து பயணிகளும் இருக்கை பட்டி அணிவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டி.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
அந்த விதியை பின்பற்றாத பயணிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருக்கை பட்டி அணியாத பயணிகளுக்கு மட்டுமல்லாமல், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கும் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்த சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல சாலை விபத்துகளை ஆய்வு செய்தபோது, இருக்கை பட்டி அணியாததன் காரணமாக பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டில் பல்வேறு பகுதிகளில் 25 நாட்களில் நிகழ்ந்த 147 விபத்துகளில் 155 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இருக்கை பட்டி வசதி ஏற்படுத்த டிசம்பர் 14 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த காலக்கெடு முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கடந்துள்ள நிலையில், தற்போது இருக்கை பட்டி பரிசோதனைகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam