காலநிலை மாற்றம் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! ஜனாதிபதி

Ranil Wickremesinghe Weather
By Jenitha Nov 30, 2022 07:24 AM GMT
Report

காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மனிதன் – காலநிலை மாற்றம் எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உலகத் தலைவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக கொப் கட்டமைப்பின் கீழ் கூடிவருகின்றனர்.

எனினும், கொப் செயன்முறையின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய மற்றும் கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இன்னும் தயாராக இல்லை.

கொப் 27 இல் எட்டப்பட்ட முடிவுகள் துன்பத்திலிருந்து நாடுகளை விடுவித்து ஒரு முற்போக்கான நிலையில் வைக்க மீண்டும் தவறிவிட்டன.

அரசியல்மயமாக்கல் மற்றும் காலதாமதம் 

காலநிலை மாற்றம் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! ஜனாதிபதி | 2022 United Nations Climate Change Ranil

அரசியல்மயமாக்கல் மற்றும் காலதாமதம் ஆகியனவே வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கவலைலக்குரிய விடயமாகும்.

உச்சிமாநாட்டின் இறுதி முடிவு ஊக்கத்தை இழப்பதாக அமைந்துள்ளது. மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது காலநிலை நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.

உலகிலுள்ள தெற்கு நாடுகள் இழப்பு மற்றும் சேதத்துக்காக பகுதி அளவில் வழங்கப்பட்ட நிதியுடன் போராடியபோதும் கடந்த ஆண்டுகளில் G77 நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் அழுத்தம் காரணமாக பாரியளவில் சாதித்துள்ளன.

இழப்பு மற்றும் சேதங்கள் நிதி சரியான பாதையில் செல்கின்றபோதும், தேவையான நிதி பங்களிப்புகளை செய்வதற்கு பொறுப்பான நாடுகளை அடையாளம் காண்பதில் ஒரு முக்கியமான புறக்கணிப்பு உள்ளது.

பொறுப்புக்கூறுதல் மற்றும் இழப்பீடுகள் பற்றிய சரத்துக்களை கொண்டதான நிதியை ஸ்தாபிப்பது பற்றறிய எவ்வித குறிப்புகளும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

G77 நாடு

இதன்விளைவாக இதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இழப்பு மற்றும் சேதங்கள் நிதி, வினைத்திறனுடன் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் G77 நாடுகள் தொடர்ந்தும் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், இந்த நிதி கடந்தகால நிகழ்வுகளுக்கானது - இது ஏற்பட்ட சேதங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கும். இது காலநிலை மாற்றத்திற்கான மூல காரணங்கள் குறித்து கவனம் செலுத்த மாட்டாது.

எனவே தற்போது இடம்பெற்றுவரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக, 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

உலகம் முன்பு கணித்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேலும் தேக்க நிலையில் இருக்க முடியாது.

உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக் கூடாது என்று கடந்த ஆண்டு உலகமே ஒருமனதாக தீர்மானித்தது. இதற்கான செயல்திட்டமும் முன்வைக்கப்பட்டது.

அதற்கான அசல் இலக்கு நடைமுறைப்படுத்தப்படாத போதும் அதனை செயற்படுத்த வேண்டிய விதம் குறித்து கொப் 27 இல் சமரசம் செய்யப்பட்டது. மேலும், புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவதிலோ அல்லது உமிழ்வுகள் மீதான புதிய இலக்குகளிலோ உறுதியான உறுதிப்பாடு எதுவும் இல்லை.

நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தல்

காலநிலை மாற்றம் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! ஜனாதிபதி | 2022 United Nations Climate Change Ranil

இந்த ஒப்பந்தங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு ஒரு எளிய கட்டு. காலநிலை மாற்றம் என்பது பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலானது.

உலகத் தலைவர்கள் அக்கறையுடன் இவ்விடயத்தில் ஈடுபடவில்லை என்றால், உலகளாவிய காலநிலை மோசமடைந்து, குடியிருப்புகள் பாதிக்கப்படும்போது அவர்கள் வெறுமனே ஓரத்தில் இருந்து பேச்சு நடத்தியவர்களாக மட்டுமே இருப்பர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள கொப் 28 மற்றொரு தொடக்கப் புள்ளியாக இருக்கக்கூடாது, மாறாக கடந்தகால முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதாக இருக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயல்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் –ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டும்.

மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில் கொப் 28 இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பபட வேண்டும். இல்லையென்றால் கொப்பினை களைப்பதே சிறந்தது. இது மேலும் தொடர தேவையில்லை.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US