என்னால் நடக்க முடியாதது எனது கல்விக்கு தடையாக இல்லை! மாணவனின் உறுக்கமான பதிவு(Photos)
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.
இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கமைய மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குபேந்திரன் ரினோவன் என்ற மாணவனின் சாதனை பலரையும் ஈர்த்துள்ளது.
செங்கலடியினை சேர்ந்த குபேந்திரன்-கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன
ரினோவன் பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் இரண்டு கைகளும்
தொழிற்பாடு குறைந்த நிலையிலேயே இருந்துவந்துள்ளது.
விடாமுயற்சியால் வெற்றி
விசேட தேவையுடைய மாணவரான இவர் நேற்றிரவு (25) வௌியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார்.
ரினோவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன், இவரது தந்தை குபேந்திரன் ஒரு காவலாளியாக தொழில் புரிகிறார்.
நடக்க முடியாத தனது மகனை அவரது தாய் கஜேந்தினி,தினமும் பாடசாலைக்கு சுமந்து சென்று தனது மகன் கல்வியில் சிறக்க தன்னாலான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கிறார்.
தாயின் பிராத்தனை
இது தொடர்பில் அவரது தாயார் கருத்து தெரிவிக்கையில்,“எனது மகனால் நடக்க முடியாது இருப்பினும் நன்றாக படிப்பார். அவர் தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். எனக்கு மகிழ்ச்சி தான்.
இருப்பினும் அவர் எப்படியாவது நடந்து விட வேண்டும். அது தான் என்னுடைய பிரார்த்தனை. இப்போது நான் பார்த்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் அவரை நினைக்க தான் கவலையாக உள்ளது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பில் ரினோவன் கூறுகையில்,“நான் இந்த பரீட்சையில் 180 புள்ளிகள் எடுக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் 160 புள்ளிகள் தான் எடுத்துள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
என்னால் நடக்க முடியாது தான் அது எனது கல்விக்கு ஒரு தடையாக இருந்ததில்லை.எனது அம்மா தான் எனக்கு முழு ஆதரவாக இருந்தார்.நடக்க முடியாத எனக்கு எனது தந்தை உழைத்து வாங்கிய Walker உதவியாக உள்ளது.
எனது பாடசாலையில் நண்பர்கள் ஆசிரியர்கள் உட்பட எல்லாரும் எனக்கு சாப்பிடும் போது கை கழுவி விடுவார்கள், கீழே விழும் பொருட்களை எடுத்து தருவார்கள்.என்னை பக்கத்து வகுப்பறைக்கு தூக்கி செல்வார்கள்.
அதுமட்டுமன்றி எனக்கு இன்னும் பல உதவிகள் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.எதிர்காலத்தில் நான் ஒரு பொறியியலாளராக வேண்டும்.
உலகத்திற்கான கருத்து
இதேவேளை என்னை போன்று பலர் இங்கு இருக்கின்றார்கள் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்,
“உள்ளம் உடைமை உடைமை
பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.”
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது அதிகம் கிடைக்கலாம் ஆனால் அவை நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
எனவே தமது குறைகளை எண்ணி வருந்தாமல் முடங்கி விடாமல் முழு முயற்சியுடன் செயற்படுங்கள்.”என கூறியுள்ளார்.
சகல வசதி வாய்ப்புகளும் வளங்களும் இருந்தாலும் சாதிக்க தவறுவோருக்கு மத்தியில் விடா முயற்சியால் சாதித்துள்ள ரினோவன் போன்ற மாணவர்கள் வாழ்த்தி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.
மேலதிக தகவல்-குமார்

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
