2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் (LIVE)
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தை முன்னிட்டு நாடாளுமன்ற அமர்வு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய அமர்வின் போது, முதல் நாள் விவாதத்தில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்புக்கான இரண்டாம் நாள் விவாதம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
“முதல் நாள் விவாதத்தில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை. எனவே நாளை முதல் நாடாளுமன்றத்துக்கு அவர் வரவேண்டுமென அழைப்பு விடுக்க வேண்டும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்றைய தினம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
நாடாளுமன்றில் பிரசன்னமாகாத நிதியமைச்சர்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
