வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம் (LIVE)
2022ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று முதல் ஏழு நாட்களுக்கு விவாதம் இடம்பெற்ற பின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதமானது இன்று முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என தெரியவருகிறது.
இதன் பின்னர் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தொடர்புடைய செய்தி....
இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை! 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ
