உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களம் உறுதி
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியதையடுத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப்பரீட்சை நடைபெற்றது.
278,196 பாடசாலை மாணவர்களும் , 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்
விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதனால், விடைத்தாள் திருத்தும் செயற்பாடு பின்னடைவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.