5000 ரூபா கொடுப்பனவு தொகை 2000 ரூபாவாக குறைக்கப்பட்டமை குறித்து விளக்கம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு தொகை குறைக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கோவிட் பெருந்தொற்கை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டங்களின் போது வசதி குறைந்த மக்களுக்கு தலா 5000 ரூபா வழங்கப்பட்டது.
எனினும் இந்த தடவை இந்த தொகை 2000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரன பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு தொடர்ச்சியாக நிதி நிவாரணங்களை வழங்குவதில் சிரமங்கள் நீடித்து வருகிறது. இதற்கு முன்னர் மூன்று தடவைகள் மக்களுக்கு 5000 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.
இவ்வாறு நிதி உதவி வழங்குவதற்காக 80 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2000 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லாமிலிருக்கலாம். அதனை ஒப்புக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத வசதி குறைந்த மக்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.