திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது
திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (23.3.2026) கைப்பற்றப்பட்டது.
கந்தளாய் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம். சஞ்சீவ பண்டார அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மலிந்த செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மணல் களஞ்சியசாலை ஒன்றினை முற்றுகையிட்டனர்.
கைது
இதன்போது, எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமும் இன்றி, மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (24) மூதூர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam