200 தடவைகள் தோப்புக்கரணம்! - வடக்கு கல்வித்திணைக்களம் அதிரடி
யாழ். வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் மாணவர் ஒருவரைச் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க மூவர் கொண்ட விசாரணைக் குழுவை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.
தரம் 6இல் பயிலும் குறித்த மாணவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது.
எனினும், பெற்றோர் பாடசாலைக்குச் சென்றபோது மாணவனைத் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டிருந்தார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை வைத்தியசாலையில் நேற்று காலை 8 மணியளவில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து மாணவன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட குழுவை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
யாழில் அதிகரித்துள்ள மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
