உக்ரைனுக்கு 200 கோடி ரூபா நிதியுதவி: உதவிக்கரம் நீட்டும் கனடா
உக்ரைனுக்கான நிதியுதவி வழங்கும் கூட்டமைப்பிற்கு கனடா ரூபா 200 கோடியை புதிய தொகுப்பாக வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவதை எதிர்த்து உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.
பிரித்தானியா தலைமையில் கூட்டமைப்பு
இந்த போரில் உக்ரைனுக்கு தேவையான நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் உட்கட்டமைப்பிற்கு தேவையான உதவிகளை வழங்க பிரித்தானியா தலைமையில் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டது.
குறித்த கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, டென்மார்க், நெதர்லாந்து போன்ற பல நாடுகள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் போர் இடைவிடாமல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசிய பிரதமர் ரூட்டோ உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிக்காக சுமார் 4 ஆயிரம் கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |