பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் கைது
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (10.10.2022) நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர் 6.5 மில்லியன் மதிப்புள்ள கார் மற்றும் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்
இதேவேளை சந்தேகநபர் இன்று (11.10.2022) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam