20 வெசாக் தான நிகழ்வுகள் சுற்றிவளைப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த 20,000 தான நிகழ்வுகளில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய 20 தான நிகழ்வுகளுக்க எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 20000 தான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேற்கொண்ட விசேட பரிசோதனையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது.
இந்நிலையில், கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4000 வெசாக் தானங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்க்கேடுகளுடன் இயங்கிய 5 வெசாக் தானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தபபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதனை
இதன்போது கொத்து, பிரைட் ரைஸ், கடலை , பாண் , மரவள்ளிக்கிழங்கு மற்றும் குளிர்ப்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட வெசாக் தானங்களே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இப்பரிசோதனை நடவடிக்கைகளுக்காக 2000ற்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பரிசோதனை நடவடிக்கைகளானது எதிர்வரும் 27ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பொதுச் சுகாதாரப் பரிசோதாகர் சங்கம் தெரிவித்துள்ளது.
[EDV6WGN ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
