உலக வங்கியின் 20 மில்லியன் ரூபா நிதி உதவி: விளாப்புகுளம் அணைக்கட்டு புனரமைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள பளம்பாசி கிராமத்தில் விளாப்புகுளம் அணைக்கட்டு புனரமைக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் அணைக்கட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு 01.11.2025 இன்று இடம்பெற்றுள்ளது.

20 மில்லியன் ரூபா செலவு
விளாப்பு குளத்தின் அணைக்கட்டு விவசாயிகள் கையளிக்கும் நிகழ்விற்கு உலக வங்கியின் ஆலோசகர் பொறியியலாளர் மனோகரன், பொறியியலாளர் பிரதீப் மற்றும் ஒட்டுசுட்டான் கமநலசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரான விவசாய நீர்பாசன திட்டத்தின் கீழ் கமநலசேவை திணைக்களத்தின் கீழ் உள்ள 23 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புனரமைக்கப்பட்ட குளங்களில் முதல் குளமாக பளம்பாசி கிராமத்தில் உள்ள விளாப்பு குளம் விவசாயிகளின் பாவனைக்காக 20 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 19 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam